
இம்மலையின் மேற்பகுதியில் தேவதாரு மரங்கள் வளர்கின்றன. நடுப்பகுதியில் கற்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. கீழ்ப் பகுதியில் நீரோட்டம் உண்டு. மெல்லிய மேகம் இம்மலையைச் சூழந்து கொண்டால், மழை பெய்வது போல் உணரலாம். கோடைக் காலத்தில் தியென்ஜின் மாநகரின் தாங்கு கடற்கரையில், சங்கு பொறுக்குவது, நண்டு பிடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள், பயணிகளை ஈர்க்கின்றன. ஒரு நாள் மீனவர் போல வாழ்வது என்னும் சுற்றுலா நடவடிக்கையை நகர் வாழ் மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர். இந்நகரின் வசந்த காலத்தில் நடைபெறும் பீச் விழாவும் குளிர்காலத்தின் உறைபனி விழாவும், பயணிகளுக்கு மகிழ்ச்சி தருகின்றன. 1 2 3
|