பூமி போல அது உருப் பெற்ற, பின்னர் கற்களை இழந்து விட்டிருக்கலாம் என்கிறார் மெஸஞ்சரின் முதன்மை அறிவியலாளரான ஸீன் சாலமன்.
இது போன்ற பலவற்றை அறிந்து கொள்ள மேண்டுமாயின், புதன் கோளை முழுமையாக அறிய வேண்டியுள்ளது. 1974, 1975 இல் மூன்று முறை புதன் நோக்கிப் பயணித்த மரினர்-10, அதன் மேற்பகுதியின் 45 விழுக்காட்டைப் படம் பிடித்து விட்டது
ஏழரை ஆண்டு கழிந்த பின்னர்தான், புதன் கோளை மெஸ்ஞ்சர் அடையும் என்பதை மறந்து விடக் கூடாது.
புதனின் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு மெஸஞ்சர் ஓராண்டு எடுத்துக் கொள்ளுமாம். புதன் கோளில் இவ்வளவு இரும்பு இருப்பது என் என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்வதில், அறிவியலாளர் ஆர்வம் காட்டுகின்ரனர்.
சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள புதன் கோளானது, சூரிய உதயத்துக்கு முன்பு அல்லது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்புதான் வெளிப்படுகிறது. எனவே, அலைந்து திரியும் விண்மீன் என அறிவியலாளர் அதைக் குறிப்பிடுகின்றனர்.
1 2 3
|