ஜெர்மன் 500 மோட்டார் வாகனம் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி ஆலைகளின் நலனை, ஜெர்மன் மோட்டார் வாகனத் தொழில் துறை சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அண்மையில் சிறப்புக் குழுவை அது நிறுவி, சீனாவுக்கு வந்து, சீன நுகர்வோருக்கு ஜெர்மன் மோட்டார் வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இச்சங்கத்தின் ஆளுனர் காட்ஸ்சாக்(Gottschalk) கூறியதாவது—
"வாகனத் தொழில் நுட்ப மற்றும் சீர்திருத்தத் துறையில், நாங்கள் உலகில் முதலிடம் வகிக்கிறோம். எதிர்காலத்தில், தரமிக்க வாகனங்கள் சீன நுகர்வோருக்குக் கிடைக்கும் பொருட்டு, ஜெர்மன் வாகனத் தொழில் துறை, சீனாவிலுள்ள அதன் வணிக அலுவலை விரைவுபடுத்தி, உணர்வுபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர உள்ளது" என்றார் அவர்.
1 2 3
|