அமெரிக்க கார், சீனாவில் நுழைந்துள்ளது. ஜூன் திங்களில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச கார் கண்காட்சியில், Ford கூட்டு நிறுவனம் உற்பத்தி செய்யும் 51 வகை வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பார்வையாளரின் கண்களுக்கு இது விருந்து படைத்தது. இப்போது, சீனாவுடன் கூட்டாக உற்பத்தி செய்யும் வாகனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு, ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் துணை ஆளுனர் சியு கோ சென் கூறியதாவது—
"சீனாவில் இந்நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு, சீராக இருக்கிறது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை, விற்பனை அலுவல் 200 விழுக்காடு அதிகரித்துள்ளது. முழு ஆண்டின் சாதனை மீது நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்" என்றார் அவர்.
உலகின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவில் நுழைந்து, முதலீட்டு அளவை அதிகரித்து வருகின்றன. பன்னாட்டுக் கூட்டு நிறுவனங்கள், சீனத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்து, ஒத்துழைப்பதன் மூலம், சீன கார் சந்தையில் 90 விழுக்காடு பங்கு பெற்றுள்ளன. 1 2 3
|