ஜெர்மன் கார்கள் வெகு காலத்துக்கு முன்பே சீனாவில் அடி எடுத்து வைத்து விட்டன. இறக்குமதி வாகனங்கள் தவிர, ஆண்டுதோறும் சீனாவில் உற்பத்தியாகும் 20 லட்சம் கார்களில், 7 லட்சத்துக்கு மேற்பட்டவை, ஜெர்மன் தொழில் சின்னங்களுக்கு உரியவை. BMW குழுமம், கடந்த ஆண்டின் இறுதியில், சீனாவில் கூட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனத்தை நிறுவியது. தற்போது, 5 புதிய ரக கார்களை அது உற்பத்தி செய்கிறது. அவற்றின் தேவை, அதிகமாக உள்ளது. இம்முதலீட்டுத் தொழில் நிறுவனத்தின் ஆளுனர் பிரிஸ்லெர்(Preissler), பெருமிதத்துடன் கூறியதாவது—
"சீனாவில் மிக சிறந்த ஆடம்பர காரின் உற்பத்தியாளராக நாங்கள் மாறி, சீன சந்தையுடன் வளர்ச்சியுற வேண்டும்" என்றார் அவர்.
சீனாவிலுள்ள ஜெர்மன் கார் உற்பத்தியாளரில், Volkswagen குழுமம், முக்கிய சக்தியாகும். சீனாவில் உற்பத்தியாகும் கார்களில், அதன் கார்கள் 50 விழுக்காடு வகிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன், Audi கார் சீன அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலுவல் காராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் Daimler Chrysler கூட்டு நிறுவனம் சீனாவில் கார் உற்பத்தியில் இறங்கியுள்ளது.
1 2 3
|