• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-20 08:39:56    
ஏதன்ஸ் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி

cri
 

கால்பந்து 12 ஆண்டுகளுக்கு பின், U 17 ஆசிய இளைஞர் கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டம் பெறும் வாய்ப்பினை சீன அணி மீண்டும் பெற்றுள்ளது. செப்டம்பர் 15ந் நாள் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் சீன அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியைத் தோற்கடித்து, இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில், பிரிவுப் போட்டியில் தன்னிடம் தோல்வி கண்ட வட கொரிய அணியுடன் மோதும். செப்டம்பர் 14ந் நாள் சீனாவின் தாலியன் நகரில் நடைபெற்ற ஆசிய கால்பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சீனத் தாலியன் சிதே அணியும் சௌதி அரேபியாவின் இதிஹாதே அணியும் தலா ஒரு கோல் போட்டு போட்டியை சமன் செய்தன.
 
மேசைப் பந்து சீன மேஜை பந்து ஒப்பன் போட்டி செப்டம்பர் 16ந் நாள் சீனாவின் சாங்சுன் நகரில் துவங்கியது. உலக பெயர் பட்டியலின் முதல் 50 விளையாட்டு வீரர்களிலான 32 பேர் இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில், போர், சென் வெய்சிங், சீன வீராங்கனைகளான வாங் நான், சாங் யி நிங், மாலின் சென் சி, வாங் லி சின், வாங் ஹௌ முதலியோரும் இடம்பெறுகின்றனர். முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் சீன விளையாட்டு வீரர்கள் அனைவரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். ஆனால் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற வட கொரியா வீராங்கனை கிம் சியாங் மெய் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

1  2  3