
சீனாவில், பொருளாதாரம் வளர்ச்சியுறுவதுடன், பின்னணிச் சேவை தொழிலும் விரைவாக வளர்ச்சி காணலாயிற்று. தற்போது, அதன் அளவு மயமாக்க மற்றும் சமூக மயமாக்க நிலையை உயர்த்தி, செலவைக் குறைத்து, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கருதப்படுகிறது.
1970 ஆண்டுகளின் இறுதியில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனாவில் துவங்கியது. அதே வேளையில், பின்னணிச் சேவை எனும் கருத்து சீனாவில் உட்புகுத்தப்பட்டது. கடந்த 24 ஆண்டுகளில், அது நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது சீனாவின் பின்னணிச் சேவை ஆண்டு மதிப்பு, 30 லட்சம் கோடி யுவானை நெருங்கியுள்ளது. இதன் அதிகரிப்பு விகிதம், அதே கால உள் நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பை விட அதிகமாகும்.
ஆனால், நீண்டகாலமாக, நவீன பின்னணிச் சேவை என்பது, பல சீனத் தொழில் நிறுவனங்களுக்குச் சரியாக புரியவில்லை. சொந்த பின்னணிச் சேவை கூட்டு நிறுவனத்தைக் கொண்டு, இச்சேவைக்கான செலவைக் குறைக்கலாம் என்று பெரும்பாலோர் கருதுகின்றனர். ஆகவே, அளவு மயமாக்க நிலையும் சமூக மயமாக்க நிலையும், தாழ்ந்த நிலையில் உள்ளன.
1 2 3
|