
பீர் உற்பத்தி ஆலை
சீனாவின் ஷான் துங் மாநிலத்தின் சிங் தாவ் பீர் உற்பத்தி ஆலை, நூறு ஆண்டு வரலாறு உடையது. 1993ஆம் ஆண்டில், பங்கு முதலீட்டு முறை சீர்திருத்தத்துக்குப் பின், வெளிநாடுகளில் சந்தைப்படும் முதலாவது பங்குமுதல் கொண்ட அரசு சார் தொழில் நிறுவனமாக அது மாறியது. ஓரளவுக்கு இந்நிறுவனம் வளர்ச்சியடைந்த போது, சொந்த பின்னணிச் சேவை கூட்டு நிறுவனம் நிறுவப்பட்டது. சீனாவின் பல்வேறு இடங்களில் நேரடி விற்பனையில் அது ஈடுபடலாயிற்று. ஆனால், இச்செயல்முறை நல்ல பயன் பெறவில்லை. இந்நிறுவனத்தின் துணை ஆளுநர் Zhang Xue Ju கூறியதாவது,
"பெருமளவு முதலீட்டை நாங்கள் செலவழித்தோம். ஆனால் ஓராண்டுக்குப் பின், சுமார் ஒரு கோடி யுவான் நட்டம் ஏற்பட்டது. பின்னர், 3வது தரப்பு பின்னணிச் சேவையை நாடும் எண்ணம் எங்கள் மனதில் உண்டாயிற்று. பின்னணிச் சேவையில் சீராக செயல்பட்ட கூட்டு நிறுவனத்தைத் தேடி, அதனுடன் ஒத்துழைப்பது எனும் வழிகாட்டலில், ஹாங்காங் வணிக அறிவிப்பு பின்னணிச் சேவை கூட்டு நிறுவனத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்." என்றார் அவர்.
1 2 3
|