
மஞ்சு இன மக்களின் வீட்டில் பொதுவாக மூன்று அறைகள் உள்ளன. மேற்கில், உரிமையாளரின் படுக்கை அறை. கிழக்கில் விருந்தினர் அறை. நடுவில் சமையல் அறை. மஞ்சு இனத்தைப் பொறுத்த வரை, மேற்கு, மதிப்புடையது. எனவே, குடும்பத்தில் மதிப்புமிக்கவர், மேற்குப் பகுதியிலான படுக்கை அறையில் வசிக்கின்றனர். படுக்கை அறையில் தெற்கு, வடக்கு, மேற்கு என முப்பக்கங்களிலும் மண்ணால் ஆன, படுக்கைகளின் மீது குடும்பத்தினர் அமரலாம். விருந்தினர், மேற்குப் படுக்கையில் அமரக் கூடாது. ஏனெனில், அதில் உள்ள சிறிய மரத்துண்டில், சிவப்புத்தாளில் மஞ்சு இன மூதாதையரின் பெயர் எழுதப்பட்டுள்ளது. மஞ்சு இனத்தவரின் வீட்டில், மிகவும் மதிக்கப்படும் பொருள், இதுவாகும்.

வசந்த விழாவின் போது, மஞ்சு இன மக்கள், பட்டாசு வெடிகளைக் கொளுத்துவர். பின்னர், தினை, இறைச்சித் தூள் முதலியவற்றை ஷிஜ எனும் ஒரு வகை புறாவுக்கும், காக்கைக்கும் தருவார்கள்; மஞ்சு இனத்தின் கதையில், இவையிரண்டும், கடவுள் பறவைகள். அவை, தேவலோக கடவுளின் இரண்டு சேவகர். எனவே, மஞ்சு இன மக்கள் இப்பறவைகளை பேணிமதிக்கின்றனர்.
1 2 3 4
|