
இயற்கை காட்சிப் பிரதேசத்தின் சுற்றுப்புறத்திலுள்ள சூழலுக்கான கட்டுப்பாடு குறித்து, இம்மாவட்டத்தின் துணை தலைவர் யே லி ஹுவா கூறியதாவது:
"பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதைக் கருத்தில் கொள்வதுடன், இம்மாவட்டத்தின் புவியியல் நிலையை மாவட்ட அரசு முழுமையாகக் கருத்தில் கொண்டுள்ளது. மாவட்ட அரசு பொருளாதாரத்தை வளர்ச்சியுறச்செய்வதுடன், உயிரின வாழ்க்கைச் சூழலுக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் வலுமைமிக்க மாவட்டமாக இது மாற வேண்டும். உயிரின வாழ்க்கைச் சூழலில் சுற்றுலா மாவட்டமாகவும், எழில்மிக்க மாவட்டமாகவும் மாற வேண்டும்" என்றார் அவர்.

இம்மாவட்டத்தில், வளமிக்க சுற்றுலா மூலவளம் உண்டு. தவிர, வளமிக்க தாதுப் பொருள் மூலவளமும் உள்ளது. 1990ஆம் ஆண்டுகள் முதல், 50க்கு அதிகமான தாதுப் பொருள் வகைகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில், கேல்சைட் எனும் சுண்ணாகப் படிவு அளவு சுமார் 30 கோடி டன்னாகும். அன்றியும், இது தரம்மிக்கது. எளிதில் தோண்டி எடுக்கப்படக் கூடியது.
1 2 3
|