• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-09-30 13:10:32    
சிங் யாங் மாவட்டத்தில் சுரங்க அகழ்வு

cri

கடந்த சில ஆண்டுகளில், தாதுப் பொருட்களைத் தோண்டி எடுப்பது என்பது இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு முக்கிய காரணியாகும். ஆனால், திட்டமிடுதலிலும் நிர்வாகத்திலும் அறிவியல் முறை குறைவு. தாது தொழிலின் வளர்ச்சியில் பல பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இம்மாவட்டத்தின் நான் யாங் வட்டம், மிக அதிக கேல்சைட் படிவு அளவுடைய பிரதேசங்களில் ஒன்றாகும். இவ்வட்டத்தின் தலைவர் Ning Jin Yuan கூறியதாவது:

"1994ஆம் ஆண்டில் இங்கு கேல்சைட் ஐத் தோண்டி எடுக்கத் துவங்கியது. 2000ஆம் ஆண்டு வரை, மொத்தம் 38 தனியார் மற்றும் கூட்டாண்மைத் தொழில் நிறுவனங்கள் அங்கு வந்து, அதைத் தோண்டி எடுத்தன. அப்போது, அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில், பிரதேசப் பொருளாதாரத்தை விரைவாக வளர்ச்சியுறச்செய்ய வேண்டும். அதனால், பணம் சம்பாதிப்பதில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டின. இதன் விளைவாக, இடர்ப்பாடு ஏற்பட்டது. சுற்றுச்சூழலுக்கு வெவ்வேறான அளவில் நாசம் ஏற்பட்டுள்ளது." என்றார் அவர்.

2000ஆம் ஆண்டுக்கு முன், சிறிய தொழில் நிறுவனங்கள் அதைத் தோண்டி எடுத்தன. முழுமையான தாதுப் படுகைகள் பல குறிப்பிடத்தக்க சிறிய சுரங்கங்களாகப் பிரிக்கப்பட்டன. இது மூலவளத்தைக் கடுமையாக விரயப்படுத்தியுள்ளது என்று நிங் தெரிவித்தார்.


1  2  3