சுரங்க தொழிலை வளர்ச்சியுறச்செய்வதுடன், உள்ளூர் பிரதேசத்தின் வளமிக்க சுற்றுலா மூலவளத்தைச் செவ்வனே பாதுகாக்கும் பொருட்டு, அகழ்வின் கடுமையான நிலையை எதிர்நோக்கி, இதை துப்புரவு செய்து, சரிப்படுத்துவது என, மாவட்ட அரசு தீர்மானித்தது. 2001ஆம் ஆண்டு, சுரங்க அகழ்வைச் சரிப்படுத்தத் துவங்கியது. முன்பு இருந்த சுமார் 40 தொழில் நிறுவனங்களை 10 தொழில் நிறுவனங்களாக மீண்டும் உருவாக்கியது. அகழ்வுத் திட்டத்தை மீண்டும் வடிவமைத்தது. இதனால், சுரங்க அகழ்வின் பாதுகாப்புத் தன்மை பெரிதும் உயர்ந்துள்ளது. யே லி ஹுவா கூறியதாவது:
"2004ஆம் ஆண்டின் முற்பகுதியில், 76 திறந்த வெளிச் சுரங்கங்கள் மூடப்பட்டன. இவற்றில், பெரும்பாலானவை முக்கிய சுற்றுலா நெறியிலுள்ள சிறிய சுரங்களாகும். இவற்றுக்கு உரிய உதவி வழங்கப்பட்டது." என்றார் அவர்.
1 2 3
|