பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பையும் ஒருங்கிணைந்து வளர்ச்சியுறச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டதால், உள்ளூர் பொருளாதார மற்றும் இயற்கைச் சூழல் மேம்பட்டுள்ளது. தற்போது, மேலதிக வெளியூர் தொழில் நிறுவனங்களும், அன்னியத் தொழில் நிறுவனங்களும் கூட முதலீடு செய்து, வர்த்தகம் செய்ய அங்கு வந்துள்ளன.
இமெரிஸ் என்பது, பிரெஞ்சு கூட்டு நிறுவனமாகும். 1998ஆம் ஆண்டில், இம்மாவட்டத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறைகள் அதற்கு உதவி வழங்கின. 2001ஆம் ஆண்டில், இம்மாவட்டத்தில் முதலீடு செய்ய தீர்மானித்து, 2 லட்சம் டன் ஆண்டு உற்பத்தி ஆற்றலுடைய கேல்சைட் பதனீட்டு ஆலையை உருவாக்கத் திட்டமிட்டது. இது வரை, 5 லட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்து, 3 உற்பத்தி நெறிகளை உருவாக்கியுள்ளது. இதன் ஆண்டுப் பதனீட்டு ஆற்றல் 70 ஆயிரம் டன்னை எட்டியுள்ளது. 1 2 3
|