சுரங்கங்களுக்கான கண்காணிப்பை வலுப்படுத்தி, சுரங்க அகழ்வுத் திட்டத்தின் படி தோண்டி எடுப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, சுரங்கங்களுக்கான கண்காணிப்பு பணிக்குழுவை மாவட்டத்தின் தொடர்புடைய துறைகள் நிறுவியுள்ளன.
மாவட்ட அரசின் நடவடிக்கையை, உள்ளூர் மக்கள் ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கின்றனர். இந் நடவடிக்கையில், மூடப்பட்ட சில சிறிய அகழ்வுத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் நட்டம் அடைவர்; சுரங்க அகழ்வைச் சரிப்படுத்தும் நடவடிக்கையை அவர்களில் பெரும்பாலோர் புரிந்து கொண்டுள்ளனர். சென் ஷ்யு துங் என்பவர், கூறுகிறார்:
"கடந்த 3 ஆண்டுகளில், சுரங்கத்தைத் தோண்டி எடுப்பதில் நான் ஈடுபட்டுள்ளேன். சுரங்கத்தின் நுழைவாய் மூடப்பட்டது. எனக்கு நட்டம்; ஆயினும், சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்புக்கும் சுரங்க மூலவளத்தின் நியாயமான அகழ்வு மற்றும் பயன்பாட்டுக்கும் இது சாதகமானது. இதற்கு நான் ஆக்கப்பூர்வமாக ஆதரவளிக்கிறேன்." என்றார் அவர்.
1 2 3
|