
சீனாவின் வடபகுதியில், உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு, வூ சுவான் மாவட்டத்தில், பான் பூ சோவ் எனும் இளம் விவசாயியும் மங்கோலிய நாட்டைச் சேர்ந்த அவரது மனைவி ச்சு லாவும் தற்போது பிரபலமாக விளங்குகின்றனர். கறவைபசுவை வளர்ப்பதன் மூலம் வளம் அடைவது எப்படி என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டாக உள்ளனர்.
பான் பூ சோவ், தன் மனைவி-மகனுடன் அழைத்துக் கொண்டு மங்கோலியா சென்று, மாமன்மாமியாரை அவர் பார்த்து வருகிறார். காரணம், மனைவி ச்சு லா, மங்கோலியாவின் தலைநகர் உலான் பட்டூர் நகரில் பிறந்தவர். வீட்டின் முற்றம் அகலமானது, சுத்தமானது. மாட்டுப்பட்டியில் பசுக்கள் புல் தின்று கொண்டிருந்தன. வளமான, நிம்மதியான கிராமிய காட்சி அங்கு தென்பட்டது.
1 2 3
|