
5 ஆண்டுகளுக்கு முன் பான் பூ சோவ் உலான் பட்டூர் நகருக்குச் சென்று, ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கலானார். அதற்கு அருகில் ஒரு சிகை அலங்காரக்கடை இருக்கிறது. அங்குப் பணி புரிந்த ச்சு லா, அவருக்கு அறிமுகமானார். விரைவில் இருவரும் காதலிக்கலாயினர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமணம் நடைபெற்றது.

பான் பூ சோவின் வீடு, சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ளது. அங்கு வறட்சி அதிகம், மழை குறைவு, மண் வளமற்றது. வயிற்றுப் பிழைப்புக்காக அங்குள்ள விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளில், அவர் குடும்பத்தினர் 2 ஹெக்டர் நிலத்தில் பயிரிட்டு வந்தனர். ஆண்டு முழுவதும் பாடுபட்டு உழைத்தனர். ஆனால் நல்ல அறுவடை காலத்திலும் கூட, 5000, 6000 யூவானை மட்டும் அவர்கள் ஈட்ட முடிந்தது. கடந்த ஆண்டுகளில், முன்பு விளை நிலமாக இருந்த வனப்பிரதேசத்தில் மரம் நடுவது என்ற திட்டப்பணியை மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கம் அங்கு செயல்படுத்துவதால், உள்ளூர் மக்கள் நிலத்தில் பயிரிடும் உற்பத்தி வழிமுறையிலிருந்து படிப்படியாக விலகி, பன்முகப் பொருளாதாரத்தில் ஈடுபடலாயினர்.
1 2 3
|