• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-14 16:41:48    
ச்சியௌசு இயற்கை காட்சி

cri

                                           ச்சியெசு இயற்கை காட்சி

சீனாவின் ஹோனான் மாநிலத்தில் ச்சியெசு நகரம் அமைந்துள்ளது. அதன் புறநகரில் காணப்படும் மலைகள் கம்பீரமானவை. சென்நுங் மலை அவ்வற்றில் ஒன்றாகும். சென்நுங் மலை வான ளாவியது. இதற்கு ஒரு கதை உண்டு. பண்டைக் கால மன்னர் சென்நுங் இவ்விடத்தில் தானியங்களை வித்தியாசப்படுத்தி, பல்வகை புல்லைச் சாப்பிட்டுப்பார்த்தாராம். அப்பொழுது முதல், வேளாண் பயிர் பயிரிடும் சமுதாயத்தில் சீனா அடி எடுத்துவைத்தது. இம்மன்னரை நினைவு கூரும் பொருட்டு, சென்நுங் மலை என அதுற்குப் பெயர் சூட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் சென்நுங் மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் நின்றால், காற்று வீசும் போது உருவாகும் ஒலி, காதில் விழும். இவ்விடத்தில் கம்பீரமான மலை செங்குத்தான கற்பாறை ஆகியவற்றைக் கண்டுகளிக்கலாம்.

 

இலையுதிர் காலத்தில் இம்மலையிலான மரங்களின் இலைகள் சிவப்பாக மாறிவிடும். பயணி சுச்சியெ கூறியதாவது, இங்குள்ள இயற்கைக் காட்சியைக் கண்டுகளித்த நான், சீனாவை எண்ணிப் பெருமைப்படுகின்றேன். இங்குள்ள காட்சி எழில் மிக்கது என்பது உண்மையே என்றார் அவர். இம்மலைக்கு அருகில் பெய்சுங் மலை அமைந்துள்ளது. பெய்சுங் மலையின் அகலமான இடத்தின் அளவு, இரண்டு, மூன்று மீட்டராகும். குறுகியது ஒரு மீட்டர். இம்மலை கரடுமுரடானது. மலையின் இரு பக்கங்களிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. மலையில் நின்று கீழ் நோக்கிப் பார்த்தால் பயமாக இருக்கும். சென்நுங் மலையிலும் வட கிழக்கு சீனாவின் சாங்பெய் மலையிலும் மட்டும், வெண்ணிற தேவதாரு மரங்கள் காணப்படுகின்றன. இத்தகைய தேவதாரு மரங்களின் வயது 400 ஆண்டுகளைத் தாண்டினால் தான், அவை வெண்ணிறமாகிவிடும். சென்நுங் மலையில் 16000க்கும் அதிகமான வெண்ணிற தேவதாருகள் வளர்கின்றன.

1  2  3