சிங்தியெ ஆற்றுக் காட்சித் தலத்தில் தாசியென் ஏரி சுட்டத்தக்கது. இந்த ஏரியின் நீளம் சுமார் 7 கிலோமீட்டராகும். அகலம் 90 மீட்டர். நீரின் ஆழம் சுமார் 60 மீட்டராகும். இந்த ஏரியில் பல்வகை மீன்கள் வளர்கின்றன. இதனால், தாசியென் ஏரி, மீன் பிடிக்க விரும்புவோர் பெரிதும் விரும்பும் இடம் என்று கூறலாம். இரு கரையிலான கற்கள், மக்களை ஈர்க்கின்றன. இவற்றைக் கற்பனையுடன் கண்டுகளித்தால் கதை வரும். வழிகாட்டி ஹொயூஹொன் கூறியதாவது, இதோ பார், வலது கரையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு மலைக் குன்றில், 4 சிறிய கற்கள் உள்ளன.

தென் பக்கத்தில் காற்களைக் குறுக்காக வைத்துவிட்டு அமரும் ஒரு மூதாட்டியின் உருவச் சிலை காணப்படலாம். அவருடைய உடையில், சீனாவின் பாரம்பரிய மகளிர் தனிச்சிறப்பு தென்படுகின்றது. அவருடைய பெயர் சான்நியாங். அவருக்கு முன் பக்கத்தில் 3 சிறிய கற்கள் உள்ளன. இவை, அவருடைய 3 மகன்களாகும். நன்றாகக் கல்வி கற்குமாறு, தம் குழந்தைகளுக்கு சான்நியாங் அறிவுரை கூறுகிறார் என்பது தெரிகின்றது. இதனால் இக்காட்சித் தலத்தின் பெயர், சான்நியாங் மகன்களுக்கு அறிவுரை கூறுவதென்பதாகும் என்றார் அவர். தாச்சியென் ஏரியில் காட்டு வாத்துக்கள் உள்ளன. நாள்தோறும் அதிகாலையில், அவை இந்த ஏரிக்கு வந்து, அந்திப்பொழுதில் வீடு திரும்புகின்றன. ச்சியௌசுவின் எழில் மிக்க இயற்கை காட்சி அவற்றையும் ஈர்த்துள்ளதாம். 1 2 3
|