
உருமுச்சி நகரம்
சீன நிலப்பரப்பில் ஆறில், ஒரு பகுதி வகிக்கும் சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில், விகுர், ஹசாக் உள்ளிட்ட, சீன சிறுபான்மைத் தேசிய இன மக்கள் குழுமி வாழகின்றனர். சீனாவின் மருத்துவகைத் துறையில், ஆயிரம் ஆண்டு வரலாறுடைய விகுர்மருந்து, தலைசிறந்து விளங்குகின்றது. விகுர் இன மருந்து வளர்ச்சி பற்றி இப்போது அறிமுகப்படுத்துகின்றோம்.
விகுர் இன இளைஞர் jvlaitiக்கு, ஏகப்பட்ட மகிழ்ச்சி ஏனெனில், அவரைத் துன்புறுத்தி வந்த தொண்டை வலி நீங்கி விட்டது. உருமுச்சியிலுள்ள விகுர் மருத்துவமனை கொடுத்த விகுர் இன மருந்தினை உட்கொண்ட பின், தொண்டை வலியிலிருந்து விடுதலை பெற்றார்.
"தொண்டை வலி அடிக்கடி ஏற்பட்டது. மருந்து பலவற்றை உட்கொண்டாலும், பயனில்லை. பின்னர், விகுர் மருத்துவமனையிலிருந்து விகுர் இன மருந்தை வாங்கி உட்கொண்ட பின் தொண்டை வலி குறைந்து, இப்போது, குணமடைந்துள்ளேன்",என்றார் அவர்.
1 2 3
|