
விகுர் இன மருத்துவமும், மருந்தும், 2500 ஆண்டு வரலாறுடையன. சீனப் பாரம்பரிய மருத்துவ இயலின் ஒரு முக்கிய பகுதியாக, இது திகழ்கின்றது. பண்டைய விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து பற்றிய அடிப்படைக் கருத்து, கி. மு. 4வது நூற்றாண்டிலேயே, உருவாயிற்று. விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயல் வரலாற்றின் சிறப்பு ஆய்வுக்கான நிபுணர் அல்ப், இது பற்றிக் கூறுகையில், வரலாற்றில் பட்டுப்பாதையின் வளமானது, விகுர் இன மருத்துவம் மருந்து ஆகியவற்றின் உருவாக்கத்தில் முக்கிய செல்வாக்கு வகிக்கின்றது என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசம், மத்திய ஆசியாவின் மையத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பிய-ஆசிய கண்ட பட்டுப்பாதையை ஒன்றிணைக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்திய சீனாவின் ஹன் வம்ச காலமும், 1400 ஆண்டுகளுக்கு முந்திய தங் வம்ச காலமும் தொடக்கம், பண்டைக்கால பட்டுப்பாதையின் வளத்தின் காரணமாக, விகுர் இன மருத்துவ இயல், ஹன் இன மருத்துவயியல், புராதன கிரேக்க மருத்துவ இயல், அரபு மருத்துவ இயல், இந்திய மருத்துவ இயல் ஆகியவை, ஓங்கி வளரும் நிலைமை உருவாயிற்று. அடிக்கடி நிகழும் கருத்துப் பரிமாற்றம், ஒன்றிடமிருந்து மற்றது கற்று பயன்படுத்துவது ஆகியவற்றினால் விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயல் இடைவிடாமல் வளர்ந்து முன்னேற்றமடைந்து, தனிச்சிறப்பியல்புடைய பாணியுடைய ஒன்றாக, அதனை படிப்படியாக உருவாக்கும் போக்கில், விகுர் இன மருத்துவம், மேற்கூறியவற்றின் தலைசிறந்த உள்ளடக்கங்களைச் சேர்த்துள்ளது" என்றார், அவர்.
1 2 3
|