
தைய் இனக் கிராமம்
தைய் இனம், தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்திலுள்ள சிறுபான்மைத் தேசிய இனமாகும். மூங்கில் வீடு, வட்டமான பாவாடை, மயில் நடனம், நீர் தெளிப்பு விழா ஆகியவை, இவ்வினத்தின் தனிச்சிறப்பியல்பைக் காட்டியுள்ளன. சிசுவான்பெனா சோவானது, தைய் இன மக்கள் முக்கியமாக வசிக்கும் இடமாகும். அதன் தலைநகரான ஜிங்ஹொங்கில் இவ்வின மக்கள் நவீன வாழ்க்கை நடத்துகின்றனர்.

ஆனால், தலை நகரிலிருந்து சமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தைய் இனக் கிராமத்தில், இவ்இன மக்களின் பழக்க வழக்கங்கள் நிலைநிறுத்தப்பட்டுவருகின்றன. எமது செய்திமுகவர் இக்கிராமத்திற்குச் சென்ற போது, தொலைவிலிருந்து தைய் இன இசை அவரது காதில் விழுந்தது. 1 2 3
|