நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, தைய் இனப் பாடகர் பாடிய பாடலாகும். அவரைச் சென்ஹா என்று கிராம மக்கள் அழைக்கின்றனர். திருமண விழா, ஈமச் சடங்கு அல்லது வழிபாட்டு நடவடிக்கை நடைபெறும் போது, பாடல்களைப் பாடுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். தைய் இன மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் இத்தகைய பாடும் முறை நீண்ட வரலாறுடையதாம். ச்சென்ஹா இல்லாவிட்டால், காய்கறியில் உப்பு இல்லாதது போல் தோன்றுகிறது. வாழ்க்கையில் சுவையில்லை என்று தைய் இன மக்கள் கருதுகின்றனர்.

தைய் இனக் கிராமத்தில், முதியோர் சிலர் பெயெ எனும் பனை மரத்தின் இலையில் திருமறை வாசகங்களைச் செதுக்கியதை எமது செய்திமுகவர் கண்டார். இவர்களில் ஒருவருக்கு 82 வயதாகிறது. எனினும், ஊசி போன்ற சிறு கருவியைக் கொண்டு இதில் எழுத்துக்களைச் செதுக்கினார். சிறு வயதில், கோயிலில் இச்செதுக்கு நுட்பத்தைக் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். முன்பு, தைய் இன மொழி, ஆண் குழந்தைக்கு மட்டும் சொல்லிக்கொடுக்கப்பட்டது. ஆண் குழந்தை, கோயிலில் முனிவராக இருந்து தான், தைய் இன மொழியைக் கற்றுக்கொள் முடியும்.

1 2 3
|