இக்குழுமத்தின் துணைத் தலைவர் வாங் சென் தாவ் கூறியதாவது—
"உள்நாட்டு வெளிநாட்டு தீவிர சந்தைப் போட்டியை எதிர் நோக்கி, அரசு சாரா தொழில் நிறுவனங்கள் இணைந்து, பெரிய நிதி குழுமத்தை உருவாக்க வேண்டும். இது எங்கள் எதிர்கால வளர்ச்சியின் ஒரு திசையாகும். வென் சோ நகரின் அடிப்படை வசதி கட்டுமானம், மாநிலத்தின் முக்கிய நீர் மின் திட்டப்பணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணி முதலியவற்றில் பங்கு வகிப்பதுடன், பெரிய ரக நாட்டு வளர்ச்சித் திட்டப்பணியில் பங்கு எடுக்க வேண்டும்" என்றார் அவர்.
பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் மற்றும் சந்தைப் போட்டி தீவிரமடையும் வளர்ச்சிப் போக்கில், குடும்பத் தொழில் நிறுவனங்கள் அல்லது கிராமப்புறத் தொழில் நிறுவனங்களிலிருந்து வளர்ச்சியுற்று வந்துள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்கள், நவீன நிர்வாக வழிமுறையை மேற்கொண்டு, நவீன தொழில் நிறுவனமாக மாற வேண்டும் என்று தொடர்புடைய பொருளியலாளர் கருதுகின்றனர்.
1 2 3
|