• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-22 15:16:25    
விகுர் இன மருத்துவம்

cri

விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயலின் தனிச்சிறப்பியல்பு எது? சிங்கியாங் விகுர் மருத்துவமனையின் உள்மருத்துவ இயல் நிபுணர் பக்இசோப் அஜி. விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயல் ஆய்வுக்குடும்பத்தில் பிறந்தவர். 70 வயதாகும் அவருக்கு, 40 ஆண்டு அனுபவம் உண்டு. அவர் அறிமுகப்படுத்தியதாவது:

"மூலிகை மருந்து, தாதுப்பொருள், விலங்கு ஆகிய மூன்று வகைகள், விகுர் இன மருத்துவம் மற்றும் மருந்து இயலின் முக்கிய மருந்துகளாகும். சிகிச்சையில், அவை, தத்தன் சனிச்சிறப்பியல்புடையன. எடுத்துக்காட்டாக, Huo Xiang எனும் மூலிகை மருந்து, இரைப்பை நோய்க்குச் சிறந்தது." என்றார், அவர்.

மருந்தைக் கொண்டு, சிகிச்சை அளிப்பது என்பது, விகுர் இன மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது. இயற்கை மருந்து என்பதால், அதன் பக்க விளைவு குறைவு. ஆனால், சிகிச்சை பயன்மிக்கது. உணவு மூலம் சிகிச்சை பெறுவதும், பராமரிப்பு மூலம் சிகிச்சை பெறுவதும் அதன் பல்வேறு சிகிச்சை முறைகளில் இடம்பெறுகின்றன. உணவு மூல சிகிச்சை என்பது, விகுர் இன மக்கள் சொந்தமாகத் தயாரித்த வெவ்வேறான உணவுகளைக் கொண்டு, நோயைத் தடுப்பதாகும். வெந்நீர் ஊற்று முதலியவற்றைப் பயன்படுத்தி, நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொள்வது, பராமரிப்பு சிகிச்சை முறையாகும்.

1  2  3