• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-22 15:16:25    
விகுர் இன மருத்துவம்

cri

தற்போது. சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பரிதேசத்தில், 40 விகுர் இன மருத்துவ சிகிச்சை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. விகுர் இன மருத்துவ மற்றும் மருந்து துறையில் 2700க்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அத்துடன், விகுர் இன மருந்து உற்பத்திக்கென, 5 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கியாங் விகுர் தன்னாட்சிப் பிரதேசத்தில், மருத்துவச்சிகிச்சை, கல்வி, அறிவியல் ஆய்வு மருந்தாக்கம் ஆகியவற்றுடன் அடிப்படையில், இசைவான வளர்ச்சி நிலைமை இப்போது உருவாகியுள்ளது.

சிங்கியாங்கின் தலைநகர் உருமுச்சியிலான சிங்கியாங் விகுர் இன மருத்துவ மனை, பன்நோக்கத் தன்மை வாய்ந்த மருத்துவ மனையாகும். இம்மருத்துவ மனையின் தனித்துவம் வாய்ந்த சிகிச்சை பற்றி, ஐஹதி அப்லிச்சி அறிமுகப்படுத்தியதாவது:

"பல்லாண்டுக்கால வளர்ச்சியினால், Vitiligo நோய், தோல் நோய், இருதய மற்றும் ரத்தக்குழாய் நோய், எலும்பு நோய் முதலியவற்றுக்கான சிகிச்சையில், இந்த மருத்துவ மனை குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இச்சிகிச்சை முறையில், விகுர் இன மருத்துவத்தின் தனிச்சிறப்பியல்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது" என்றார் அவர்.

1  2  3