• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-26 18:06:09    
வூ சி நகர்

cri

வூ சி புறநகரிலுள்ள இன் சியு யுவான் எனும் குடியிருப்பு பிரதேசத்தில் கு யோங் பாவின் வீடு, அமைகிறது. நகரமும் கிராமமும் ஒன்றிணையும் முன்னேற்றப் போக்கில், அவர்கள் முன்பு வாழ்ந்த ஊர், பொருளாதார வளர்ச்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

வூ சி நகரம், சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்த நடுத் தர நகரமாகும். சீனாவின் நகரமும் கிராமமும் ஒன்றிணைக்கப்படும் முன்னேற்றப் போக்கில், அது பயன்மிக்க முயற்சி பலவற்றை மேற்கொண்டுள்ளது. ஜியாங் இன் நகர், இ சிங் நகர் மற்றும் 100க்கு அதிகமான மாவட்டங்கள், வூ சி நகராட்சியின் கீழ் உள்ளன. மக்கள் தொகை 40 லட்சம் அதிகமாகும். தற்போது, அதன் நபர்வாரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 5000 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. 1000 அமெரிக்க டாலர் எனும் சீன நபர்வாரி உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட இது அதிகமாகும். சீரான பொருளாதார நிபந்தனை இந்நகரில் நகரமும் கிராமமும் ஒன்றிணைவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அடிப்படை அமைத்துள்ளது. இது வரை 20 லட்சம் கிராமவாசிகள் நகரவாசிகளாக மாறியுள்ளனர்.

1  2  3