
பான் ஜின் லோங் என்பவர், வூ சி நகரின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவர். இங்கு, நகரமும் கிராமமும் ஒன்றிணைந்து வளர்ச்சியுறுவது குறித்து, அவர்களின் சிந்தனை தெள்ளத் தெரிவாக இருக்கிறது. அவர் கூறியதாவது:
"வூ சி நகர் தொழில் துறையின் உற்பத்தி ஆற்றலின் பரவலை சரிப்படுத்துவதை நனவாக்கும் பொருட்டு, '3 நெடுகிலும்' எனும் நெடுநோக்கு திட்டம், நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது, யாங்சி ஆற்றின் நெடுகிலும், உயர் வேக நெடுஞ்சாலையின் நெடுகிலும், தை ஹு ஏரியின் நெடுகிலும் என்பது அத்திட்டமாகும். பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்றார் அவர்.

சீனாவின் மிக நீளமான யாங்சி ஆறு, வூ சி நகருக்கு குறுக்காக செல்கிறது. வளர்ச்சியடைந்த நெடுஞ்சாலை வலைப்பின்னலை இந்நகர் கொண்டுள்ளது. பல மாவட்டங்களும் வட்டங்களும், புகழ்பெற்ற தை ஹு ஏரியின் நெடுகிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே, உற்பத்தி ஆற்றலின் ஏற்பாட்டைப் பார்த்தால், வூ சி நகரின் தொழில் துறையானது, தரை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்தைச் சார்ந்து வருகிறது. 1 2 3
|