• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-04 11:39:26    
குவாங்சோவில் சுற்றுலா

cri

குவாங்சோவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஹென் சி ஹவு கூறியதாவது, குவாங்சோவிலுள்ள காட்சித் தலங்கள் பற்றி குறிப்பிடும் போது, இந்நகரின் 8 காட்சித் தலங்கள் புகழ்பெற்றவை. குவாங்சோ மக்கள் தமது பிறந்தகத்தை நேசிக்கின்றனர். பண்பாட்டுப் பாரம்பரியமுடைய குவாங்சோவில், பெய்யுன் மலை, சூச்சியாங் ஆற்றின் இரவு காட்சி, யெசியூ மலை முதலியவை, பார்வையிடத் தக்கவை. இவை, குவாங்சோ மாநகரின் எழில் மிக்க காட்சியைப் பிரதிபலித்துள்ளன என்றார் அவர். பெயுன் மலை, இந்நகரின் வடக்கில் அமைந்துள்ளது. அங்கு மலைத்தொடர்கள் கம்பீரமாக நிற்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக, சிற்றாறு ஓடுகின்றது. மழைக்குப் பின்னரோ, வசந்த காலத்தின் முடிவிலோ, மலைத்தொடரை வெண்ணிற மேகம் சூழ்ந்திருப்பது எழில் மிக்க காட்சியாகும்.

குவாங்சோ மக்கள் பெயுன் மலையை விரும்புகின்றனர். நேரம் கிடைக்கும் போது, அங்குச் சென்று தூய்மையான காற்றை சுவாசிக்கின்றனர். வசந்த கால அறிவிப்புப் பள்ளத்தாக்கு, peack மலர் சிற்றாறு, நன்லன் கோயில், வான் மூட்டும் மலை உள்ளிட்ட காட்சித் தலங்கள், ஈர்ப்புத் தன்மை வாய்ந்தவை. இந்த 8 காட்சித் தலங்களில் முத்து ஆற்றின் இரவு காட்சியைக் கண்டுகளிக்கப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குவாங்சோ நகரின் ஊடாக ஓடும் முத்து ஆறு, தாய் ஆறு என்று குவாங்சோ மக்களால் அழைக்கப்படுகின்றது. இந்த ஆறு, குவாங்சோ நகருக்கு உயிராற்றல் தருகின்றது. 23 கிலோமீட்டர் நீளமுடைய முத்து ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள கட்டிடங்கள் மேல் வண்ண விளக்குகள் ஒளிவீசுகின்றன. ஆற்றில் படகுகளில் செல்லும் பயணிகள் இந்த அழகான காட்சியைக் கண்டுகளிக்கின்றனர்.
1  2  3