
இவற்றில், ஒரு நாள் பயணம், தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சுற்றுலா முதலியவை உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் சிறந்த தெரிவாகத் திகழ்கின்றன. சுற்றுலா வகைகள், பின்வருமாறு, குவாங்சோவில் ஒரு நாள் சுற்றுலா, முத்து ஆற்றங் கரையிலான பண்பாட்டு வரலாற்றுச் சின்ன சுற்றுலா, அண்மைக்கால புரட்சி வரலாற்றுச் சின்ன சுற்றுலா, பண்டைக் கால வணிக நகரச் சுற்றுலா, வின்நான் பூங்கா பண்பாட்டுச் சுற்றுலா, குவாங்சோ மௌவென் மலை உயிரின வாழ்க்கை சுற்றுலா, முத்து ஆற்று இரவு சுற்றுலா என்பனவாகும் என்றார் அவர்.

தற்போது, குவாங்சோவில், 1570க்கும் அதிகமான உணவு விடுதிகள் உள்ளன. இவற்றில் 190, நட்சத்திர நிலை உணவு விடுதிகளாகும். தவிர, நட்சத்திர நிலை சேவை வரையறையை எட்டிய உணவு விடுதிகளும் மலிவான உணவு விடுதிகளும் பல உள்ளன. ஒரு நாளுக்கு 2 லட்சத்துக்கு அதிகமான பயணிகளை அவை வரவேற்க முடியும் என்று வழிகாட்டி யெ கூறினார். 1 2 3
|