 குவாங்சோ மாநகரின் துங்சாங் சதுக்கத்தில், மாபெரும் செயற்கை நீர் வீழ்ச்சி உள்ளது. தியெஹ நீர் வீழ்ச்சி என்று அழைக்கப்படுகின்றது. அதன் பின்புறம், 89 மீட்டர் உயரமுடைய கண்ணாடிச் சுவர் ஆகும். ஆசியாவில் மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியாக இது திகழ்கின்றது. ஒரு லட்சம் ஹெக்டர் நிலப்பரப்புடைய பசுமை மயமாக்க சதுக்கம், பண்டைக் கால மாதிரி மலர் படுக்கை, சிற்பங்கள் ஆகியவை, சதுக்கத்தின் சுற்றுப்புறத்திலுள்ள கட்டடங்களுக்கு இசைவாக அமைந்துள்ளன. சுன்ஹுவா வென்னீர் ஊற்று, விண்வெளிப் பயணக் காட்சி உலகக் காட்சி, துங்பாங் பொழுதுபோக்கு இடம், குவாங்சோ கடல் வாழ்வன அகம், சாங்லுங் இரவு விலங்கு உலகம், வுலுன்சான் விடுமுறை மண்டலம், சியான்சியாங் வன விலங்கு உலகம் முதலியவை தனிச்சிறப்பியல்பு மிக்கவை. சாங்லுங் இரவு விலங்கு உலகம் என்னும் காட்சித் தலத்தில், பயணிகள், பழமையான சிறிய தொடர் வண்டியில் அமர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி, செயற்கைப் பள்ளத்தாக்கு, காடு, புல்வெளி ஆகியவற்றுக்கூடாகச் சென்று, சுற்றுலாவின் மகிழ்ச்சிகரமான உணர்வைப் பெறலாம்.
 இரவு விலங்கு உலகத்தைப் பார்வையிட்ட பயணிகள் மகிழ்ச்சிகரமான கடலில் மூழ்குகின்றனர். வண்ண விளக்கு ஒளியில், உலகில் தலைசிறந்த விலங்கு காட்சிக் குழுக்களும் விலங்கு நடிகரும் உயர் நிலை கலை நிகழ்ச்சியை வழங்கின. சியாசியாங் வனவிலங்கு உலகமானது, சீனாவின் மிகப் பெரிய வெண்ணிற புலி கண்டுகளிப்பு மற்றும் இனப் பெருக்கத் தளமாகும். இத்தலத்தில் வெண்ணிறப் புலிகளின் எண்ணிக்கை, 60ஐத் தாண்டியுள்ளது. இது, உலகின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியாகும். பயணிகள், சற்று தொலைவில் இருந்தவாறு, விலங்குகளுடன் தொடர்பு கொள்ளலாம். வழிகாட்டி யெச்சியெஅ கூறுகிறார், தற்போது குவாங்சோ மாநகரின் தொடர்புடைய வாரியங்கள், உயிரின வாழ்க்கை சுற்றுலா, கண்காட்சி சுற்றுலா, அறிவியல் தொழில் நுட்பச் சுற்றுலா, வேளாண் சுற்றுலா, தொழிற்துறை சுற்றுலா, உடல் நலக் காப்புச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளன. 1 2 3
|