• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-11 19:06:33    
குவாங்சோ மாநகரம்

cri

தென் சீனாவில் அமைந்துள்ள குவாங்சோ மாநகரம் புகழ்பெற்ற வரலாற்று நகரமும் சுற்றுலா தலமும் ஆகும். குவாங்துங் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் யெ ஜியெ அவ் கூறியதாவது, குவாங்துங் மாநிலத்தின் தலைநகர் குவாங்சோ. அதன் வரலாறு, பண்பாடு, இயற்கை மற்றும் மனிதப் பண்பாட்டுக் காட்சியும் குவாங்சோவில் உண்பது, குவாங்சோவில் பொருள் வாங்குவது ஆகியவையும் குவாங்சோ சுற்றுலாவின் முக்கிய தனிச்சிறப்பியல்பை உருவாக்கியுள்ளன. மேம்பாடான இயற்கை சுற்றுச்சூழல், தென் சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த நடையுடை பாவனைகள், நீண்ட வரலாறு, பண்பாடு, அதிகமான வரலாற்றுச் சிறப்பு காட்சித் தலங்கள், விதவிதமான பண்பாட்டுப் பொழுதுபோக்கு, வளர்ச்சியடைந்த வணிக-வர்த்தகச் சுற்றுலா சேவை துறை ஆகியவற்றின் காரணமாக, சீனாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக குவாங்சோ திகழ்கின்றது என்றார் அவர்.

குவாங்சோ மாநகரம் போல, ஆட்டு நகரம், தானிய கதிர் நகரம், மலர் நகரம் உள்ளிட்ட அழகான புனை பெயர் வழங்கப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை ஒரு சில மட்டுமே. அத்துடன், ஒவ்வொரு புனை பெயருக்கும் கதை உண்டு. குவாங்சோ மாநகரம், மலர் உலகம் என்று அழைக்கப்படுவது மிகையாகாது. அனைத்துக் குடும்பங்களின் மாடி முகப்பில் அல்லது முற்றத்தில் மணம் வீசும் மலர்கள் வளர்கின்றன. சீனாவின் முதலாவது தொகுதி பிரபல வரலாற்றுப் பண்பாட்டு நகரம், சிறந்த சுற்றுலா நகரம் போன்ற பெயர்களை அது பெற்றுள்ளது. சர்வதேச பூங்கா நகரமென 2001ல் சர்வதேச பூங்கா சங்கத்தால் தேர்வு செய்யப்பட்டது.
1  2  3