
இந்நகரில், தொன்மை வாய்ந்த கோயில்கள், பூங்காக்கள் முதலிய பல உள்ளன. தவிர, கோதிக் வடிவக் கட்டடங்கள், இஸ்லாமிய பாணியில் கட்டியமைக்கப்பட்ட கட்டடங்கள், மணி கூண்டு கோயில் ஆகியவை பலவும் உள்ளன. குவாங்சோ மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய பெய்யுன் மலை இயற்கை காட்சி மண்டலத்தில் பழமை வாய்ந்த உயர்ந்த மரங்கள் காணப்படுகின்றன. மலையும் நீரும் உள்ள இவ்விடத்தில் மலர்கள் நறு மணம் வீசுகின்றன. பறவைகள் பாடுகின்றன.

95 விழுக்காட்டு நிலப்பரப்பு பசுமையாக்கப்பட்டுள்ளது. பெயுன் மலையின் சிகரத்தில் ஏறி, தொலைவில் பார்க்கும் போது, இந்நகரிலுள்ள பிரபல காட்சித் தலங்களனைத்தையும் கண்டுகளிக்கலாம். அவை, 5 ஆட்டுச் சிற்பம், 5 தேவி கோயில், குவாங்தா கோயில், 6 ஆல மலர் கோபுரம், சுன்யட்சனின் நினைவுச் சின்னம் என்பனவாகும். இவையனைத்தும் இந்நகரின் தனிச்சிறப்பியல்பு ஆற்றலைப் பிரதிபலித்துள்ளன. பழமை வாய்ந்த இந்நகரின் தற்போதை சாதனைகளை நிரூபித்துள்ளன. இனிமையான குவாங்துங் இசையும் சுவையான உணவும் இத்தேநீர் விடுதியின் தனிச்சிறப்பியல்பை வெளிப்படுத்தியுள்ளது. 1 2 3
|