• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-11 19:06:33    
குவாங்சோ மாநகரம்

cri

 

குவாங்சோவில் உண்பது என்பது, சீனாவில் அனைவருக்கும் தெரியும். குவாங்சோ மாநகரம், மன நிறைவு தரும் உணவு வகை நிறைந்து காணப்படும் பெரிய நகரமாகும். அது, குவாங்துங் காய்கறி மற்றும் இறைச்சி வகையின் பிறப்பிடமாகும். ஏராளமான உணவகங்கள், பல்வகை நவீன மற்றும் பாரம்பரிய உணவுகள் ஆகியவற்றின் காரணமாக, ஈர்ப்புத் தன்மை மிக்க நகரமாக அது திகழ்கின்றது. குவாங்சோ மாநகரின் உணவு வகைகளில், குவாங்துங் கறி வகை முக்கிய இடம் வகிக்கின்றது. ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளின் உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளன. உயிருடன் கூடிய மீன், இறால், நண்டு, இனிப்பு வகை, சிற்றுண்டி முதலியவை பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

குவாங்சோவில் உண்பது தவிர, பொருள் வாங்குவதும் மகிழ்ச்சி தரும் காரியமாகும். சற்று முன் நீங்கள் கேட்டது, இந்நகரிலுள்ள வணிக நடைபாதையில் எமது செய்திமுகவர் செய்த ஒலிப்பதிவாகும்.இவ்வீதியில் காலை முதல் இரவு வரை பரபரப்பு காணப்படுகின்றது. மென்ரகத் தொழிற்துறையில் வளர்ச்சியுற்ற குவாங்சோ மாநகரின் தரமான வணிகப் பொருட்கள் பல, சீனாவிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளன. பொருள் வாங்கும் சொர்க்கம் என்று குவாங்சோ அழைக்கப்படுகின்றது. விலை மலிவான வணிகப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. பெய்ஜிங்லு என்னும் நடை வீதி, ழமின்லு பாதாயிலான வணிகப் பொருள் வீதி, சியெஹொசன் பசார் ஹொன்சன் பசார் ஆகியவை, இந்நகரிலுள்ள பிரபல வணிக மைய மண்டலமாகும். சிந்தாசின் பல் சரக்குக்கடை, குவாங்சோ நட்புறவுக் கடை முதலியவை, மாபெரும் பிரபல கடை வீதி ஆகும்.

தவிர, ஹுவாலின் கைவினைப் பொருள் வீதியிலுள்ள ஜேட் பொருள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், கௌதி வீதியிலுள்ள ஆடை மற்றும் அன்றாட பயன்பாட்டுக் கைவினைப் பொருள் கடை, வன்தெலுவிலான பண்பாட்டு வீதியிலான தொல் பொருள், ஓவியம், நேர்த்தியான கையெழுத்துப் படைப்புகள், பாங்செனிலுள்ள மலர், பறவை, மீன் வகை, சிங்பின்லு கடைவீதியிலான சீன மருந்துவகை சாங்யுவன்பாங்யில் விற்கப்படும் நவீனப் பொருட்கள் முதலியவை குறிப்பிடத் தக்கவை. வெட்டு மரச் சிற்பம், எலும்புச் சிற்பம், பூ தையல் பொருள், ஜேட் வகை பொருள், நகை வகை, சிறிய அளவிலமைந்த இயற்கை காட்சி உள்ளிட்ட பிரபல கைவினைப் பொருட்கள் ஈர்ப்புத் தன்மை வாய்ந்தவை.

1  2  3