சீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசச்சில், யென் சி எனும் இடம் அமைந்துள்ளது. விசாலமான கோபி பாலைவனத்தில், கண்ணுக்கு விருந்தாகிய பச்சை நிறம் காணப்படுகிறது. இது தான் 1000 ஹெக்டர் பரப்பளவுடைய திராட்சை தோட்டம் தான். இத்தோட்டத்தின் உரிமையாளர் லி ருய் சின் எனும் மகளிர் ஆவார். குடும்பத்தினர், உள்ளூர் மக்கள் ஆகியோர் அவரின் தலைமையில் திராட்சை பயிரிடுவதன் மூலம் வடிக்கும் திராட்சை மதுவானது, சீன திராட்சை மதுவில் புதிய அரிய மதுவாக மாறி வருகிறது. பிரெஞ்சு முதலீட்டு வணிகர்கள், இச்சிறப்பான மதுவால் ஈர்க்கப்பட்டு, லி ருய் சின்னுடன் ஒத்துழைத்து, உலக நிலை திராட்சை மது சின்னத்தைப் படைத்து வருகின்றனர்.
"சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசமானது, பழம் விளையும் இடமாகும். திராட்சை விளையும் இடமாகும். இப்பிரதேசத்தின் கடல்மட்டம், வெயில், பகலும் இரவும் காணப்பட்ட வெவ்வேறான தட்ப வெப்ப நிலை, நீண்டகாலஉறைபனி இல்லாத பருவம் ஆகியவை, தரமிக்க திராட்சை விளைவதற்கு நல்ல நிபந்தனை வழங்குகின்றன" என்றார் லி ருய் சின்.
1 2 3
|