சின்சியாங், அவரின் ஊர் இல்லை. இங்கிருந்து வெகு தூரத்திலுள்ள கிழக்கு சீனாவின் ஷான் தோங் மாநிலம் அவரின் ஊராகும். சுமார் 30 ஆண்டுக்களுக்கு முன், அவரும் அவரது கணவரும் இங்கு வந்து வேலை பார்த்தனர். அப்போது முதல், அவர்கள் சீனாவின் வட மேற்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். சின்சியாங்குக்கு வந்த தொடக்கத்தில், உழவு வேலை செய்தார். பின்னர், செங்கல் உற்பத்தி ஆலையை நடத்துவது, உடை விற்பனை, எல்லைப்பிரதேச வர்த்தகம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டிருந்தார். சின்சியாங்கில் விளையும் திராட்சை இனிப்பு மிக்கது, இனம் சிறப்பானது. ஆனால், தரமிக்க திராட்சை மது உற்பத்தி செய்யும் ஆலை இங்கு குறைவு. காலப்போக்கில், இந்நிலைமையை அவர் கண்டறிந்தார். மக்களின் வாழ்க்கை நிலை உயர்வதுடன், திராட்சை மதுவுக்கான நுகர்வு அளவும் அதிகரித்து விடும் என்று அவர் கூர்மையாக உணர்ந்தார். 1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி ஆழமாகி வரும் சீனாவில், அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு சீரான வளர்ச்சி சூழ்நிலையைப் பல்வேறு இடங்கள் உருவாக்கி வருகின்றன. லி ருய் சின்னின் யோசனை விரைவில் உள்ளூர் அரசின் ஆதரவு பெற்றுள்ளது. அவர் கூறியதாவது:
"எங்கள் யோசனை பற்றி மாவட்ட அரசாங்கத்துடன் விவாதித்த பின், அதன் பெரும் ஆதரவு பெற்றோம். இத்திட்டப்பணியை ஆராய்ந்து நிரூபிக்குமாறு சின்சியாங் வேளாண் அறிவியல் கழகத்தின் பழ மர ஆய்வகத்தைச் சேர்ந்த நிபுணரை அரசாங்கம் வர வழைத்தது. திராட்சை மது வடிப்பதில் பல்வேறு நிலை வாரியங்கள் பெரும் கவனம் செலுத்துகின்றன. நான் பெற்றுள்ள வளர்ச்சி அனைத்தும் அரசாங்கத்தின் ஆதரவைச் சார்ந்திருக்கிறது" என்றார் அவர்.
1 2 3
|