
வரி குறைப்பு மற்றும் விலக்கல், முன்னுரிமையுடன் கூடிய நில குத்தகை ஆகியவற்றை உள்ளூர் அரசாங்கம் அவருக்கு வழங்கியுள்ளது. 1998ஆம் ஆண்டில், யென் சி மாவட்டத்தின் சி சிங் வட்டத்தை அவர் தேர்ந்தெடுத்தார். அங்கு பாலைவனமாக இருந்தாலும், மண் வளம் திராட்சை பயிரிடுவதற்கு பொருத்தமானது.

லி ருய் சின் குடும்பம் இங்கு வந்து, கூடாரத்தில் தங்கியிருந்தது. கிணறு தோண்டுவது, நிலத்தில் உழுவது, திராட்சை படர அமைக்கும் பந்தல்களை உருவாக்குவது முதலியவற்றில் குடும்பத்தினர் அனைவரும் ஈடுப்பட்டனர். தரிசு நிலம் செய்த நாளை அவருடைய மூத்த மருமகள் லி சியாவ் யுன் இன்னும் மறக்கவில்லை. மாமியாரின் உறுதி குடும்பத்தைத் தாங்குகிறது என்று அவர் கூறுகிறார்.
"அவர் உறுதி மிக்கவர். எங்கள் குடும்பத்தில், அவர் கொடி போல், குடும்பத்தின் ஆதாரத்தூணாகவும் மையமாகவும் இருக்கினார். அவரின் தலைமையில் நாங்கள் இன்பத்துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும்" என்றார் அவர்.
1 2 3
|