2 ஆண்டுகளுக்குப் பின், உய்கூர் மற்றும் ஹுய் இன குடி மக்களின் உதவியுடன், லி ருய் சின் குடும்பம் 300 ஹெக்டர் பரப்பளவுடைய திராட்சை பயிரிட்டு, பல பத்து கிலோமீட்டர் நீளமுடைய பாதையை கட்டியமைத்துள்ளனர். திராட்சை முதிர்ந்த பின், மது வடிக்கும் தொழில் நுட்பத்தை சோதிப்பதற்காக, லி ருய் சின் பிரான்சுக்குச் சென்றார். சீனாவிலுள்ள பிரான்சு தூதரகத்தின் அறிமுகம் மூலம், தரமிக்க மூலப்பொருளுக்கான வினியோக தளம் அவரின் குடும்பத்துக்கு உண்டு என்பதை பிரெஞ்சு வணிகர் சிலர் தெரிந்து கொண்டனர். அவருடன் ஒத்துழைத்து, மது வடிக்க விரும்புவதாக அவர்கள் உடனடியாகத் தெரிவித்தனர். 2005ஆம் ஆண்டு மே திங்களில், 50 விழுக்காட்டுக்கு அதிகமான முதலீட்டுப் பங்கு லி ருய் சின் கொண்ட சீன பிரான்சு கூட்டு முதலீட்டு நிறுவனம் நிறுவப்பட்டது. இதற்கு சியாங் து மது தொழில் துறை என பெயர் சூட்டப்பட்டது. சியாங் து என்பது, திராட்சையின் ஊர், மதுவினால் புகழ்பெற்ற நகர் என பொருள்.
1 2 3
|