• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-11 08:23:02    
பிபா இசைக் கலைஞர் ஊ யு சியா அம்மையார்

cri

பிபா என்பது, ஒரு வகை சீன நீளிசைக் கருவியாகும். அது, வீணை போன்றது. ஊ யு சியாவின் இசைத்தல் நுட்பம், நுணுக்கமானது, அருமையானது. இயற்கையை அரவணைப்பது போன்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது.

சீன மத்திய இசைக் கல்லூரியில் படிப்பை முடித்துக் கொண்ட அவர், இப்போது மத்திய தேசிய இசைக் குழுவைச் சேர்ந்த தேசிய Orchestral இசை குழுவின் முதன்மையான பிபா இசைப்பவராவார். நாட்டின் முதல் நிலை நடிகையரும் ஆவார். சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசய கமிட்டி உறுப்பினர், அனைத்து சீன இளைஞர் சம்மேளனத்தின் உறுப்பினர் போன்ற சமூக பணிப் பதவியையும் வகிக்கிறார்.

ஊ யு சியா 1959ல் ஷாங்காயில் பிறந்தார். அவருடைய பெற்றோர் சாதாரண தொழிலாளர்களாவர். வீட்டில் அவர், மூத்த மகள், அவரை அடுத்து இரண்டு தம்பிமாரும் ஒரு தங்கையும் இருக்கின்றனர். தாய்தந்தையரின் அற்ப ஊதியத்தில், அவர்கள் வாழ்க்கை நடத்தினர். குடும்பம் வறுமையில் வாடிய போதிலும், அன்பான குடும்பமாக இருந்தது. மனதில் உறுதி வேண்டும் என்று அவருடைய பெற்றோர் அவருக்கு போதித்தனர். 4வது வகுப்பில் கல்வி பயின்ற போது, நல்ல மதிப்பெண், எழில் மிக்க கைவிரல்கள் காரணமாக, ஷாங்காய் குழந்தை மாளிகையின் பிபா பயிற்சி வகுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது முதற்கொண்டு, பிபாவுடன் அவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டு விட்டது.

1971ல் அவர் ஷாங்காய் மக்கள் வானொலி நிலையத்தின் குழந்தைகள் குழுப்பாடல் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். குழந்தை வாழ்க்கை, பசு மரத்தாணி போல் இன்று வரையிலும் நினைவில் இருக்கின்றது. அவர் கூறியதாவது—

"வறுமைக்குப் பயப்படத் தேவையில்லை. மன உறுதி இல்லாமையால் தான் பயம் ஏற்படுகிறது என்று என் தந்தையார் கூறினார். எங்கள் குடும்பம் வறியது என்ற போதிலும், நாங்கள் மிகவும் இன்பமாக வாழ்கிறோம். எங்கள் வீட்டில் அடிக்கடி சிரிப்பொலி கேட்கிறது. குடும்பம் சுமுகமாக உள்ளது. எங்கள் தாய்தந்தையர் அவ்வளவாகப் படிக்கவில்லை என்ற போதிலும், எவ்வாறு எளிமையாக வாழ்வது என்பது பற்றி எங்களுக்குப் போதித்துள்ளனர்" என்றார் அவர்.

1  2  3