• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-11 08:23:02    
பிபா இசைக் கலைஞர் ஊ யு சியா அம்மையார்

cri

1977ல் ஊ யு சியா பெய்ஜிங் நடனக் கல்லூரியின் இசை வகுப்பில் சேர்ந்தார். அவர் ஓய்வுநேர இசையிலிருந்து தொழில்முறை இசைக்கு மாறினார். அப்போது முதல் அவருடைய குறிக்கோள் மேலும் தெளிவாயிற்று. பிபா பயிற்சியில் ஈடுபட அவருக்கு கூடுதலான நேரம் கிடைத்தது.

பிபா இசைக்கப் பயின்ற தொடக்கத்தில், அவர், சிரமப்பட்டார். தமது படிப்பு அனுபவம் பற்றி அவர் கூறியதாவது—

"கல்வி பயில்வது என்பது. வெவ்வேறன காலகட்டங்களைக் கொண்டிருக்கின்றது. மிக முக்கியமானது என்னவெனில், நம்மை நாமே வளப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு வல்லுநரின் கீழ் பயின்று, குறிப்பிட்ட வல்லுநரின் வழித்தோன்றலாக இருந்து, தம்மைக் கட்டுப்படுத்தக் கூடாது. கல்வி பயில்வது என்பது, பன்நோக்கமுடையது. அதிகமாக, கண்டு கேட்க வேண்டும். அவற்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இப்படிச் செய்தால் தான், பல வல்லுநரின் சிறப்பு அம்சங்களைக் கற்றுக்கொள்ள முடியும். ஆகவே, நான் சற்று முன்னதாக இக்கருத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, கலை படிப்புத் துறையில், சுதந்திரத்தை நாடும் இளைய நங்கையாவேன்" என்றார் அவர்.

பல பிபா வல்லுநர்களிடம் அவர் கற்றுக்கொண்டார். அவர்களிடமிருந்து பல சிறப்பு அம்சங்களைக் கற்றுத் தேர்ந்தார். இதனால், உறுதியான எழில்மிக்க கலை நடை அவரிடம் உருவாயிற்று.

1  2  3