கடந்த சில ஆண்டுகளில் உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரிய வியன்னா பொன்னிற மண்டபம், அமெரிக்காவின் கார்நெகி மண்டபம், சிகாகோ இசை மையம் முதலிய முதலியவற்றில், அவருடைய அருமையான பிபா ஒலி எதிரொலித்தது. மேலும், பலமுறை ஜப்பானுக்குச் சென்று, தனிப்பட்ட இசை விழாவை அவர் நடத்தினார்.
ஊ யு சியா, கண்டிப்பு மிக்கவர். தற்போது அவர் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் கலைத்துறையின் பட்ட மேற்பட்டிப்பு பயில்கிறார். இசை இசைத்தல், பாடம் கற்பித்தல் தவிர, அவர் இசை படைப்பு மற்றும் எழுத்துப் பணியில் ஈடுபடுகிறார்.
"மழை ஒலி கேட்டு மகிழுங்கள்", "காற்றாடி மரத்துடன் விளையாடும் காற்று", முதலிய தனிப்பட்ட பிபா இசையை அவர் படைத்தார். "பிபா இசை இசைத்தல் தொகுதி", "பிபா இசைக்கான அடிப்படை பாடம்" முதலிய பாட நூல்களையும் வெளியிட்டார். பிபா தவிர, பல துறைகளில் அவர் பேரார்வம் காட்டுகிறாத். அவர் எழுதிய "ஜப்பானிலான பிபா பயணம்" என்ற கட்டுரை, செய்தித்தாள்களில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஊ யு சியாவின் குடும்பம், இன்பமயமானது. தமது கணவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவருடைய முகத்தில் ததும்புகிறது. காரணம், அவருடைய கணவன், கலைத் துறையில் அவருக்குப் பேருதவி அளித்து வருவது தான். 1 2 3
|