 "அவர் உன்னை அடிப்பதுண்டா?" என்று கேட்டேன்.
"இல்லை. அதற்கெல்லாம் அவருக்கு நேரம் கிடையாது" என்று திட்டவட்டமாகக் கூறினான்.
குடும்ப பாரம், அதனால் நேரமில்லை போலும்!
"அவர் என்ன வேலை செய்கிறார்?" என்று விசாரித்தேன்.
"வேலையா? அவர் ஒரு வேலையும் செய்வது கிடையாது. மாலை வேளையில், அவரைத் தேடி மூன்று நான்கு விருந்தாளிகள் வருவார்கள். அதனால் என்னை வீட்டில் இருக்க விடாமல் செய்கிறார். நானும் இங்கே வந்து பொழுதைக் கழிக்கிறேன்" என்றான் சிறுவன்.
இதைக் கேட்டதும், ஆடிப் போனேன்.
இப்போது சிறுவனின் அவல நிலை புரிந்து விட்டது.
அவனுடைய தந்தை, போதைப் பொருள் கிடங்கில் காவலாளி. புதிய மனைவியோ... உடலை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.
இரவில் வீடு திரும்பும் வரை, சிறுவனுக்கு வானத்து நட்சத்திரங்களே துணை!
1 2 3
|