அப்போது, திடீரென்று, "ஷுன்... எங்கே இருக்கிறாய்?" என்று ஒரு குரல் ஒலித்தது.
நான் எழுந்தேன். சிறுவன் பயந்து விட்டான்.
மீன் பிடிப்பதற்கான தூண்டிலைத் தண்ணீரில் போட்டு விட்டு, ஓடத் தொடங்கினான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.
நடுத்தர வயது நபர் ஒருவர், சிறுவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, அவனோடு நடந்தார்.
அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.
"இன்று மாலையில், உன் அப்பாவை போலீசார் கைது செய்து விட்டனர். உன் அம்மாவுக்குத் தகவல் தர முடியவில்லை. உன்னை மட்டும்தான் எங்களுக்கு அடையாளம் தெரியும்..." என்றார் அவர்.
இருவரின் நிழலும் படிப்படியாக மறைந்து விட்டது.
அந்த மனிதரின் குரலும் நின்று போனது.
மெது மெதுவாக, வீடு நோக்கி நடந்தேன்.
இரவுப் பொழுது... ஆகையால் ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது.
இப்போது என் நெஞ்சில் பாரம்!
காரணம், சிறுவனுக்கு நேர்ந்த கதி!
வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின... மங்கலாக. 1 2 3
|