• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-11-11 08:22:42    
ஏரிக்கரையில் 2

cri

"உன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் யார்?" என்று கேட்டேன்.

"நான் அடிக்கடி பார்த்தது கிடையாது. இராணுவ உடை அணிந்தவர்கள், தொழிலாளர்கள், படித்த பட்டதாரிகள்... இப்படிப் பலர் வருவதுண்டு. சில நேரத்தில் ஒருவர் கூட வருவது கிடையாது" என்றான் பரிதாபமாக.

"ஏன்?"

"உங்களுக்குத் தெரியாதா? குதிரை தலை தெருவில் உள்ள வீடுகளின் கதவுகள், இரவில் விருந்தினர்களை வரவேற்க, திறந்தே கிடக்கின்றன..." என்று அவன் ஏளனமாகக் கூறினான்.

இதற்கு மேலும் அவனிடம் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.

குடும்பச் சூழ்நிலை, காலத்தின் கட்டாயம். இதுவே, அவலத்திற்கு அடிப்படைக் காரணம்.

இந்தச் சமூகத்தில், ஏழைக்கு, இதுதான் கதி! என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை.

ஏரிக்கரையில் சுகமாக வீசிய காற்று, இப்போது அனல் காற்றாக மாறிவிட்டது போல் உணர்ந்தேன்.

அந்தச் சிறுவன் இப்போது வீடு திரும்ப மாட்டான். அவனைத் தனியாக விட்டுச் செல்ல எனக்கு மனம் வரவில்லை.

அவனுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டேன்.

இன்னும் நிறைய கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் மனம் உடன்படவில்லை. அமைதியாக யோசித்தேன்.

இந்தச் சிறுவன், சூழலுக்கு ஆட்பட்டிருக்கிறான். இவனைப் போல, இன்னும் ஏத்தனை பேர் இப்படி...

1  2  3