10க்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன், வட சீனாவின் erlianhaote நகர் மனித நடமாட்டம் இல்லாத சிறு பட்டணமாகும். அப்போது, இங்குள்ள மக்கள் தொகை 10 ஆயிரத்துக்குக் குறைவானது. தற்போது, இந்த சிறிய நகரம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சியுற்று வருகின்றது. தனது தனிச்சிறப்பியற்பினால், மக்களின் கவனத்தை இந்நகரம் ஈர்த்துள்ளது.
சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வடப்பகுதியில் erlianhaote நகர் அமைந்துள்ளது. மங்கோலியாவுக்கு செல்லும் ஒரே ஒரு இருப்பு பாதை நுழைவாய் இதுவாகும். 40 ஆண்டுகளுக்கு முன், இது கோபி பாலைவனமாகும். இங்கே நிலையான குடிமக்கள் இல்லை. பின்னர், இந்நகரில் தொடர் வண்டி போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டதால், எல்லைப்பிரதேசத்தின் சிறிய நகரமாக இது படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்றது.
1 2 3
|