1992ஆம் ஆண்டில், வெளிநாட்டுத்திறப்புக்கான சீனாவின் முதலாவது தொகுதி நகரங்களில் ஒன்றாக erlianhaote நகர் மாறியுள்ளது. அப்போது, மங்கோலியா, ரஷியா ஆகியவற்றின் வணிகர்கள் இங்கே ஒன்று குழுமினர். மங்கோலியா, ரஷியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் வணிகர்கள், சீனாவின் வணிகர்களுடன் சைகை காட்டுவது மூலம் அல்லது கணிணி மூலம் வியாபாரம் செய்தனர்.
தற்போது, இந்நிலைமை பெரும் மாற்றமடைந்துள்ளது. வெளிநாட்டு வணிகர்களுடன் இங்கே வியாபாரம் செய்யும் சீனர் திறமையுடன் பரிமாற்றம் செய்ய முடியும். அன்னிய வணிகர்கள் சிலர் சீன மொழியில் வர்த்தகம் செய்ய முடியும். 10க்கு அதிகமான ஆண்டுகளாக, மங்கோலிய வணிகர்களுடன் தாம் வியாபாரம் செய்துள்ளதாக வியாபாரி ஒருவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் erlianhaote நகரின் வணிக சந்தைவிலுள்ள ஆடை வர்த்தகம் செய்கிறார். தற்போது, மங்கோலிய மொழியில் வியாபாரம் செய்வதில் இன்னல் கிடையாது; இச்சந்தையில் பெரும்பாலான வியாபாரிகள் மங்கோலிய மொழியில் வியாபாரம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
1 2 3
|