மும்முரமாக நடைபெறும் எல்லைப் பிரதேச வர்த்தகமானது, இந்நகருக்கு முன்கண்டிராத உயிராற்றலை வழங்கியுள்ளது. தற்போது, erlianhaote நகர்ப்பிரதேசம் 3 மடங்கு விரிவாகியுள்ளது. இந்நகரில் வீதிகள் விசாலமாகவும் அழகாகவும் உள்ளன. இந்நகரின் தலைவர் Chen Heping எடுத்துக்கூறியதாவது:
"வெளிநாட்டு திறப்பு நகரங்களில் ஒன்று என்ற முறையில் வர்த்தகத்தைக் கொண்டு நகரமைப்பது, நகரத்தை வளர்ச்சியுறச்செய்வது என்ற கருத்தை erlianhaote நகரின் அரசு முன்வைத்துள்ளது. அத்துடன் erlianhaote நுழைவாயின் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானம் மற்றும் உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலுக்கான கட்டுமானத்தையும் அது நன்கு பற்றிக்கொண்டுள்ளது. 1994ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை, இந்நகரின் மொத்த உற்பத்தி மதிப்பு, 15 கோடி யுவானிலிருந்து 80 கோடி யுவானாக அதிகரித்துள்ளது." என்றார் அவர். 1 2 3
|