எல்லைப் பிரதேச வர்த்தகமானது, erlianhaote நகரின் வளர்ச்சி மேம்பாடாகும். முழு நகரின் பொருளாதார அதிகரிப்பை விரைவுபடுத்துவதற்கு முக்கிய ஆற்றலுமாகும் என்று தலைவர் Chen Heping எடுத்துக்கூறினார். இந்நகரிலுள்ள மிக பெரிய சீன-அன்னிய வணிகப் பொருள் விற்பனை சந்தையில், வியாபாரம் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. மங்கோலியா மற்றும் ரஷியாவின் தனிச்சிறப்பியல்பு சிறப்பு பொருட்களும் உள்ளூர் மென்ரக பொருட்களும் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 10 ஆயிரம் சீன-வெளிநாட்டு வணிகர்கள், பயணிகள் ஆகியோரை இச்சந்தை வரவேற்கின்றது. மங்கோலிய தரை மற்றும் சுவர் கம்பளங்கள், ரஷியாவின் நிழல்பட கருவி மற்றும் தொலைநோக்கி சாடி, சீனாவின் வீட்டுப் பயன்பாட்டுக்கான மின்சாரப்பொருட்கள் மற்றும் காய்கறி உணவு பொருட்கள் ஆகியவை நன்கு விற்பனையாகின்றன. புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டில் erlianhaote துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்த அளவு 50 லட்சம் டனை எட்டியுள்ளது. எல்லைப்பிரதேச வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 95 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 1 2 3
|