erlianhaote நகரின் விரைவான பொருளாதார வளர்ச்சியுடன், இந்நகரின் குடிமக்களின் வாழ்க்கை தரமும் தெள்ளத்தெளிவாக உயர்ந்துள்ளது. தற்போது, நகரின் வீதிகள் விரிவடைந்துள்ளது; கட்டிடங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. சந்தையில் பல வணிகப்பொருட்கள் காணப்படுகின்றன. சீனப் பாரம்பரிய வடிவ கட்டிடங்கள் அல்லது ஐரோப்பிய பாணி கட்டிடங்கள் எங்கும் காணலாம். அலுவலகங்கள், பள்ளிகள், திரைப்பட அரங்குகள் உள்ளிட்ட நகரின் அடிப்படை வசதிகள் முழுமைப்படுத்தப்படுகின்றன.
இந்நகரின் மாற்றத்தை இங்கு நீண்டகாலமாக வாழும் திரு Yang Jin Rui கண்கூடாகக்கண்டார். தன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துக்காடாக அவர் கூறுகிறார்:
"பத்து ஆண்டுகளுக்கு முன், erlianhaote நகரின் காய்கறிகள் வெளியூர்களிலிருந்து உட்புகுத்தப்பட்டன. விலை மிகவும் அதிகம். ஆனால், கடந்த சில ஆண்டுகளில், காய்கறிகளின் விலை அவ்வளவு அதிகமில்லை. வகைகளும் அதிகரித்துள்ளன. இந்நகரின் சந்தையில் தென் சீனாவிலிருந்து உட்புகுத்தப்படும் மீன், இறால், நண்டு ஆகியவற்றை வாங்கலாம்"என்றார் அவர்.
erlianhaote நகரிலிருந்து தொடங்கி, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்துக்குச் செல்லும் தேசிய பாதை ஒன்று கட்டியமைக்கப்பட உள்ளது. தவிர, இந்நகரில் ஒரு விமான நிலையத்தின் கட்டுமானத்தின் ஆயத்தப் பணி நடைபெற்று வருகின்றது என்று திரு Yang மகிழ்ச்சியுடன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
1 2 3
|