சீன-மங்கோலிய சுமூக அண்டை நாட்டு நட்புறவின் இடைவிடா வளர்ச்சியானது, வளர்ந்து வரும் erlianhaote நகருக்கு, புதிய அறைகூவலை ஏற்படுத்தியுள்ளது. இந்நகரின் தொடர்புடைய வாரியங்கள் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகப் பொருட்களின் அமைப்பை சரிப்படுத்தி, மேம்படுத்தியுள்ளன. அத்துடன், ஆற்றல் மிக்க தொழில் நிறுவனங்கள் மங்கோலியா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு சென்று, பொருளாதாரம் மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேற்கொள்வதற்கு ஊக்கமும் ஆதரவும் அளித்துள்ளன.
erlianhaote நகரின் வளர்ச்சி திட்டம் மற்றும் குறிக்கோளை பல நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நகரின் பொருளாதாரத்தை எவ்வாறு வளர்ச்சியுறச்செய்வது என்பது பற்றி, இங்கே சோதனைப் பயணம் மேற்கொண்ட சீன மத்திய கொள்கை ஆய்வகத்தின் ஒட்டுமொத்த பணியகத்தின் தலைவர் Wang Chao Ping தன் கருத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது:
"அடுத்த கட்டமாக, அரசு சாரா பரிமாற்றத்துக்கு அரசின் தொடர்புடைய வாரியங்கள் ஊக்கமளிக்க வேண்டும். ஆனால், அரசு சாரா எல்லைப் பிரதேச வர்த்தகத்தை சர்வதேச வர்த்தக நிலைக்கு உயர்த்த வேண்டும். துறைமுகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் நன்மை பயக்கும்"என்றார் அவர். 1 2 3
|