ஓங் பு லி அம்மையார் 1949ல் பிறந்தார். சிறு வயதிலிருந்தே ஆடவும் பாடவும் விரும்பினார். வீட்டின் கடைசிப் பிள்ளை ஆதலால், செல்லப் பிள்ளையாக வளர்க்கப்பட்டார். அவர் நடிப்புத் தொழுலில் ஈடுபட முடிந்தமைக்கு, அவருடைய தந்தை தான் முக்கிய காரணமாகும். அவருடைய தந்தை பீகிங் இசை நாடகத்தை வெகுவாக விரும்புகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் பாடுவார். சிறுமியாக இருந்த ஓங் பு லி, தந்தையிடமிருந்து பாடவும் நடிக்கவும் கற்றுக் கொண்டார். இதன் விளைவாக அவர் மற்றொரு கலையான திரைப்படத்தின் மீதும் பேரார்வம் காட்டலானார். அவர் கூறியதாவது—
"சிரு வயதிலிலேயே திரைப்படத்தைக் கண்டுகளிப்பதை நான் மிகுதியும் விரும்பினேன். சில வேளைகளில், உணவு கூட உண்ணாமல், என் அக்காவுடன் தொடர்ந்து ஒரு நாளில் மூன்று திரைப்படங்களைக் கண்டுகளித்தேன். பல முதுபெரும் நடிகர், என் வழிகாட்டுக்குரிய வீரர்களாவர். இது மிகவும் மர்மமாக உள்ளது என நான் கருதினேன். திரைப்படத் தொழிலில் ஈடுபடுவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை" என்றார் அவர்.
1960ல் சீனாவின் சியாங் சூ மாநிலத்தின் இசை நாடகப் பள்ளியின் தேர்வில் வெற்றி பெற்று, இப்பள்ளியில் பீகிங் இசை நாடகத்தை அவர் கற்கலானார். பட்டம் பெற்ற பின், சியாங் சூ மாநில பீகிங் இசை நாடகக் குழுவில் சேர்ந்தார். சிறப்பாக நுட்பம், எழிலான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக பார்வையாளரின் வரவேற்பைப் பெற்றார். விரைவில் இக்குழுவின் முக்கிய நடிகையாக மாறினார். அவருடைய பீகிங் இசை நாடக நடிப்புத் தொழில், விறுவிறுப்பாக வளர்ச்சியுற்ற போது, ஒரு தற்செயலான வாய்ப்பு, அவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது.
1970ஆம் ஆண்டுகளில் கிராமப்புற நிகழ்வுகளைக் கருப்பொருளாகக் கொண்ட திரைப்படத்துக்காக, நாடளவில் கதாநாயகி தேர்வு நடைபெற்றது. ஓங் பு லியின் நிழற்படம் ஒன்று, எதிர்பாராதவாறு திரைப்பட இயக்குநரின் கண்ணில் பட்டது. உடனே, இத்திரைப்பட்டத்தின் கதாநாயகனின் மனைவியாக நடிக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அது முதற்கொண்டு ஓங் பு லி திரைப்பட நட்சத்திரமாக மாறி விட்டார்.
1 2 3
|